வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வந்தவாசியில் நடைபெற்றது. இதில், எக்ஸ்னோரா மாநில நிதி நிர்வாகத் தலைவர் டி.ஏ. முனவா்தீன் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். எக்ஸ்னோரா மாவட்டத் தலைவர் பா. இந்திரராஜன் 2025-28 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக எஸ். தனசேகரன், செயலராக சி. வினோத்குமார், பொருளாளராக எ. பூவிழி உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். விழாவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.