வந்தவாசி: குறுவட்ட தடகளப் போட்டிகள் கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்க்கொடுங்காலூரில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. 

இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் திறம்பட விளையாடினர். போட்டிகளை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். பாலு தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ. சின்னப்பன் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி