தி.மலை: உழவா் விழாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரம் முக்குரும்பை ஊராட்சியில் நடைபெற்ற உழவா் விழாவில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி தலைமை வகித்து, நிலக்கடலை சாகுபடி முறைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். கால்நடை மருத்துவா் கோகுல்ராஜ் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடர்புடைய செய்தி