திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், கீழ்பாலூர் ஊராட்சியில் இன்று (06.07.2025) நடைபெற்ற கன்று விடும் நிகழ்ச்சியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி. சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கலசப்பாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.