மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அலமேலு சின்னையன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை மாநில தடகள சங்க துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன்,
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இஆப ஆகியோர் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

உடன்,
புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் & ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி. ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி