செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை (நவ. 4) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை இந்த படிவங்கள் வழங்கப்படும் என்றும், அவற்றை மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சார்-ஆட்சியர் எல். அம்பிகா ஜெயின், தொகுதியில் உள்ள 232 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி