திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயராஜ் (வயது 21). இவர் 15 வயதுடைய சிறுமியை சுமார் ஓராண்டாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த பெற்றோர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் கடந்த 2023 ஆக. 5-ஆம் தேதி சேரம்பட்டு கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி கர்ப்பமாக இருந்த நிலையில், வயிற்று வலி அதிகமாக டிச. 24-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராணி இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.