வளிமண்டல சுழற்சி காரணமாக புயல் உருவாகி 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்தது. கீழ்புதுப்பாக்கம், வடதண்டலம், பைங்கினர், அனக்காவூர், தவசி, கீழ்மட்டை, வெம்பாக்கம், திருப்பனங்காடு, அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நரசமங்கலம், மாங்கால், செல்ல பெரும்புலிமேடு, சோழவரம், அழிஞ்சில்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.