திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், செய்யாறு எம்எல்ஏ ஒ. ஜோதி பரிந்துரையின்பேரில், வெம்பாக்கம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அமைச்சர் எ. வ. வேலு உத்தரவிட்டார். இதையடுத்து, வெம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வெம்பாக்கம் திமுக மத்திய ஒன்றியச் செயலர் ஜேசிகே. சீனிவாசன் திறந்து வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்வில், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருள்தேவி செந்தில், முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ், வெம்பாக்கம் கிளை செயலர் சங்கர், எ. முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.