தி.மலை: நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில்...அதிர்ச்சி

ஆரணி-வேலூர் சாலையில் நேற்று (நவ.2) வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் படுகாயமடைந்து சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி