திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிர்தம், 500 லிட்டர் தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், 108 கிலோ விபூதி, 1,500 லிட்டர் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பல்வேறு மலர்களால் ஆன மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.