இதுகுறித்து, அவரது மனைவி தேன்மொழி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் சோமு சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்த வாழப்பந்தல் போலீசார் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சோமுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடன் மது அருந்திய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினர்கள் அக்கூர் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாழப்பந்தல் போலீசார் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் கூறியதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.