தி.மலை: முரசொலி மாறன் பிறந்தநாள்; திமுகவினர் அஞ்சலி

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஆரணி திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 17) கொண்டாடப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் விண்ணமங்கலம் ரவி தலைமையில், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி