திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு வழியாக பழனி குமரலிங்கம் ருத்தரபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் தினமும் ரயில்வே கேட் மூடப்படுவதால் அவசர தேவைகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.