திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்தாலும், யானைகள் சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உடுமலை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வாகனங்களை விட்டு இறங்கவோ, ஒலி எழுப்பவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.