திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சுடுகாட்டு வசதி, போட்டித் தேர்வு பயிற்சி மையம், நியாய விலை கடை புதுப்பித்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.