உடுமலை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பாலம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி