உடுமலையில் நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை பழைய அயக்கட்டு பாசனத்தில் உள்ள கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. போதிய தொழிலாளர்கள் இல்லாததால் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. நெல் அறுவடை பற்றாக்குறை காரணமாக அறுவடை பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால், வேளாண்மைத் துறையினர் நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி