உடுமலை அருகே வெண்பட்டு கூடு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி, மொடடக்குபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டு உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்திக்கு தேவையான மல்பெரி செடிகள் தற்போது கவாத்து செய்யப்பட்டு செழித்து வளர்ந்துள்ளன. தர்மபுரி வெண்பட்டு மையத்தில் கிலோவுக்கு அதிகபட்சமாக 742 ரூபாயும், ராசிபுரம் மையத்தில் குறைந்தபட்சமாக 403 ரூபாயும் கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை என்பதால், தமிழக அரசு வெண்பட்டுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி