உடுமலையில் பாமகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு உரிய தரவுகளுடன் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி 1000 நாட்களாகியும் தமிழக அரசு அதனை கண்டுகொள்ளாததை கண்டித்தும், உரிய இட ஒதுக்கீட்டை அளிக்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மின்னல் செந்தில் குமார் மற்றும் மனோகரன், ஊடகப் பேரவை கனகராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கமல்ராஜ், மகேந்திரன், திருமலை நாதன், கல்பனா, கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி