திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஜீவா நகர் பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.