உடுமலையில் நாளை காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கிஸ்ட் (லெனிஸ்ட்) கட்சியின் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில், மடத்துக்குளம் தாலுக்கா வருவாய் கிராமத்தில் புலம்பெயர்ந்து விட்ட நில பிரபுகளின் நிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு சுபாதீன அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் என நிர்வாகிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி