திருப்பூர் உடுமலை தளி ரோட்டில் உள்ள இம்மானுவேல் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஆசன பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இதில் உடுமலை மறை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் ஆனந்த் இறை ஆசி வழங்கினார். தொடர்ந்து, உடுமலை மறை மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆசன விருந்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் செயலாளர் மலர் ஸ்டீபன், பொருளாளர் பால் சற்குணம் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.