திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் கிரி என்பதும், அவரிடம் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.