திருப்பூரில், 19 வயது இளம்பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டிய ராமமூர்த்தி (28) கைது செய்யப்பட்டார். காதலித்து வந்த பெண் பேச மறுத்ததால், இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இளம்பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.