திருப்பூர்: பள்ளியில் விளையாட்டு விழா; மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

திருப்பூர் வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார். 

பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் திருக்குமரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

விளையாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றவர்களுக்கும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, பொருளாளர் சுருதிஹரீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி