தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவை இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.