திருப்பூர் நொய்யல் ஆற்றின் அருகே ரூ. 14 கோடி செலவில் கட்டப்பட்ட 97.30 மீட்டர் நீள, 12.90 மீட்டர் அகல உயர்மட்ட மேம்பாலத்தை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலெக்டர் மனிஷ் நாரண வரே தலைமை தாங்கிய இந்த விழாவில் மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அமித், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பாலப் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்தார்.