திருப்பூரில் உள்ள ஸ்ரீ மகேஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து நடனமாடி மகிழ்ந்தனர். தாளாளர் ரேவதி சந்திரசேகரன், தலைமை ஆசிரியை கவி காயத்ரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழாவின் இறுதியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.