திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலான கனமழை

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. அரண்மனை புதூர், காமராஜர் சாலை, குமரன் சாலை, ராயபுரம், கருவம்பாளையம், கோட்டை மாரியம்மன் கோவில், காங்கேயம் சாலை உள்ளிட்ட இடங்களில் கனமழையும், சந்திராபுரம், வீரபாண்டி, பிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது. திடீரென பெய்த இந்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி