திருப்பூர்: தீயில் கருகி மூதாட்டி சாவு

சேவூர் தேவேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த அய்யாவு மனைவி நாகம்மாள் (வயது 77). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலுக்கு அடியே கொசுவர்த்தி பற்ற வைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவர் பற்ற வைத்திருந்த கொசுவர்த்தி போர்வையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்து புகை வருவதை அறிந்த மகள் லட்சுமி வெளியே வந்து பார்த்தபோது, நாகம்மாள் தீ விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நாகம்மாள் மீட்கப்பட்டு, அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் ஏற்கனவே நாகம்மாள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி