உலர்கழிவு மேலாண்மை மையம் துவக்கம்.

திருப்பூர் மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 800 டன் கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், அவற்றை கையாள்வதில் நிர்வாகம் சிரமப்படுகிறது. இதற்கு தீர்வாக, திருப்பூர் அருகே பொங்கு பாளையத்தில் 'ரீ கெயின் ரீ பிராசஸ்' என்ற புதிய உலர் கழிவு மேலாண்மை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, பின்னலாடை கழிவுகள், பிளாஸ்டிக், அட்டைகள் போன்றவற்றை அறிவியல் பூர்வமாக வகைப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 90 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்து அனுப்பும் வசதி உள்ளது. இந்த மையத்தை தொடங்க திருப்பூர் மாநகராட்சி, தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றம் மற்றும் பின்னலாடை சங்கங்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளன.

தொடர்புடைய செய்தி