மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

திருப்பூர் அழகுமலை வித்யாலயா பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மாநில கைப்பந்து கழக துணை சேர்மன் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை அழகுமலை வித்யாலயா பள்ளியின் தாளாளர் அண்ணாதுரை மற்றும் முதல்வர் சீனிவாசன் தொடங்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலை வகிக்க, மாணவர்கள் சிறப்பாக விளையாடி அனைவரையும் கவர்ந்தனர். இறுதியில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி