திருப்பூர் காங்கயம் ரோடு எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் அமீர் முகமது அவர் அதே பகுதியில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். இவர் வீட்டின் அருகே தொழுவில் கட்டியிருந்த மாடுகள் கடந்த மாதம் 28-ந்தேதி திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாடுகளை அமீர்முகமது கடையில் கடந்த 6 மாதமாக வேலை செய்த திருப்பத்தூர் மாவட்டம் காந்திபேட்டையை சேர்ந்த பாரூர் (வயது 47) என்பவர் திருடியதாக தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.