திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கு முயன்றதால் பரபரப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக உடுமலையைச் சேர்ந்த கவுசல்யா (40) என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் இருந்து வந்த அவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து, கலெக்டர் அலுவலக வராண்டாவை நோக்கி ஓடி வந்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி