மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த தீ விபத்து தொடர்பாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் மற்றொரு கழிவுக் குடோன் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கே.எம்.பி. ஷரீப்புக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதில் வெங்கடேஷ் (44) தூண்டுதலின் பேரில் அவருடன் பணியாற்றும் மார்ஷல் (36) மற்றும் சதீஷ் (41) ஆகியோர் குடோனுக்கு தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நல்லூர் போலீசார் வெங்கடேஷ், மார்ஷல் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.