திருப்பூரில் உள்ள செங்குந்தபுரம் பகுதியில் துரை என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.25,000 திருடிச் சென்றனர். மேலும், பூச்சிக்காடு பகுதியில் பார்த்தீபன் என்பவரின் மளிகைக் கடையிலும் திருட்டு நடந்துள்ளது. இதில் ரூ.10,000 மதிப்புள்ள மளிகைப் பொருள்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.