திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் வழியாக இருந்து பழனி , திருமூர்த்தி மலை அமராவதி அணை உட்பட பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த நிலையில் தற்போது சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றை ஒன்றை கடப்பதற்கு அவதிப்படும் நிலை இருந்தது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.