மடத்துக்குளம்: பட்ஜெட் குறித்து விவசாயி கருத்து

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து கூறும் பொழுது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு காய்கறிகள் விற்பனை செய்ய தனி சந்தை அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடும் திட்டம், வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் விதமாக 100 விவசாயிகளை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை உயர்வு, 15 லட்சம் குடும்பங்களுக்கு மாடி தோட்டம் அமைக்க 75 சதவீதம் மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் திட்டம், பந்தல் காய்கறிகள் ஊக்குவிப்பு திட்டம், பாரம்பரிய காய்கறி ரகங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை வரவேற்கின்றோம். ஆனால் கீரை உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு அங்கீகார சான்று இலவசமாக வழங்க வேண்டும். என்றார்.

தொடர்புடைய செய்தி