திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், 10 விவசாயிகள் கொண்டு வந்த 3204 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. 6 விவசாயிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.69.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.64.00க்கும், சராசரியாக ரூ.64க்கும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 3780 ரூபாயாகும்.