இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம்போல நூல் மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது சிமெண்ட் சீட் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் ஒரு கருவி வேலை செய்யவில்லை என தெரியவந்தது. அதனை மேலே ஏறி பார்க்கும்படி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் கூறினார். இதனால் சுமார் 20 அடி உயரம் இருந்த மேற்கூரையில் ஏறிய சரத்குமார் அங்கு இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது தாயார் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.