சங்கத்தின் செயலாளர் பி. செல்வராஜ் சங்கத்தின் 2023–24–ம் ஆண்டு தணிக்கை அறிக்கையையும், 2023-24-ம் ஆண்டில் ஈட்டியுள்ள இலாப பிரிவினை அறிக்கையையும் வாசித்து பதிவு செய்தார். இவை தவிர மேலும் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு ரூ. 40 லட்சம் வீட்டு அடமானக் கடன்கள் வழங்கப்பட்டது. மேலும் உறுப்பினர்களுக்கு 14 சதவீத டிவிடெண்ட் வழங்கப்பட்டது. மகாசபை கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.