திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மதுக்கம்பாளையம் பிரிவில், ஏற்கனவே போடப்பட்ட சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்காமல், புதிய மண் சாலைக்கு சிமெண்ட் சாலை போன்ற பணிகள் நடைபெறுவதாகக் கூறி, சமூக ஆர்வலர் ரஜினிகுமார் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தார். அனைத்து சாலைகளையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.