நல்லிகவுண்டன் தோட்டத்தைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி (53), தாராபுரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஆரம்மாள் (75), அரசு மருத்துவமனைக்குச் சென்று மகனின் உடலைப் பார்த்ததும் துயரம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் உறவினர்களையும் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.