திருப்பூர்: கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, குன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 81 வயது மல்லநாயக்கர், தனது தோட்டத்தில் வெள்ளாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கிணற்றுச் சரிவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றபோது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி