இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - வாலிபர் பெருமாநல்லூர் அருகே உள்ள தொரவலூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரண்பாபு (வயது 19). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரண்பாபு மோட்டார் சைக்கிளில் தொரவலூர் பகுதியில் வந்துகொண்டிருந்தார். அங்கு கருப்பராயன் கோவில் அருகே உள்ள 10 அடி ஆழமுள்ள குட்டையில் அதிக அளவு தண்ணீர் நிரம்பியிருந்தது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்த சரண்குமார் நேராக குட்டைக்குள் விழுந்து மூழ்கினார்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்பாபு உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.