திருச்சி அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாதிரி பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயோ சீஎஸ்சீ பிரிவில் படித்து வரும் வேலூர் மாவட்டம் கொடியநத்தம் வசந்த நகர் எம்.குப்பம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ் வயது 17 என்பவர் இன்று காலை விடுதி அறையில் உள்ள ஃபேனில் கேபிள் வயரில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.