துறையூரில் தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்ய- சாலை மறியல்

துறையூர் அருகே காளிப்பட்டியை சேர்ந்த ராஜா, முத்துச்செல்வன் என்பவரிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால், முத்துச்செல்வன் ராஜாவின் மகன் சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து முத்துச்செல்வத்தை கைது செய்தால் மட்டுமே சுரேஷின் உடலை வாங்குவோம் என கூறி, சுரேஷின் உறவினர்கள் துறையூர் காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி