ஹார்ட் டிஸ்க் பணம் திருட்டு ராம்ஜி நகர் கொள்ளையன் கைது

கன்னட நடிகர் ரவி கௌடா, தனது காரை உடைத்து மர்ம நபர்கள் ஒரு ஹார்ட் டிஸ்க் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார். அந்த ஹார்ட் டிஸ்கில் சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து பெங்களூரு போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரைக் கைது செய்தனர். மேலும், அவரது மகனைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி