திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லதுரை ஆகியோரை நேரில் சந்தித்து, திருமாவளவன் குறித்து முகநூலில் தவறாக சித்தரித்த தென்னூர் அப்பாஸ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.